/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளை
/
ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளை
ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளை
ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளை
ADDED : டிச 29, 2024 06:20 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 30 சவரன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் வசித்து வருபவர் மணி,62; ஓய்வுபெற்ற ஆசிரியர். கடந்த 24ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று மாலை இவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர், மணியிடம் போனில் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு விரைந்து வந்த மணி, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 30 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.