sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காவல்துறை பெண் அலுவலர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

/

காவல்துறை பெண் அலுவலர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

காவல்துறை பெண் அலுவலர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

காவல்துறை பெண் அலுவலர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை


ADDED : செப் 29, 2024 06:45 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் காவல் துறை பெண் நிர்வாக அலுவலர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், சாலமேடு என்.ஜி.ஓ., காலனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி சாந்தி, 50; இவர், உளுந்துார்பேட்டையில் 10வது பட்டாலியன், காவல் படை அலுவலக நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் புதுச்சேரியில் அரசு பணியில் உள்ளார்.

இருவரும் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us