/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு 4,506 பேர் 'ஆப்சென்ட்'
/
டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு 4,506 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : செப் 29, 2025 01:13 AM

விழுப்புரம்: மாவட்டத்தில் நடந்த ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வை 10,309 பேர் எழுதினர்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ., தேர்வு நேற்று காலை 9:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 14,815 பேர், தேர்வு எழுத அனுமதி பெற்றிருந்தனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட மையங்களில் நடந்த தேர்வை, 10,309 பேர் எழுதினர். இதில், 4,506 பேர் தேர்வெழுத வராமல் 'ஆப்சென்ட் ஆகினர்.
விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அண்ணா பல்கலை பொறியியல் உறுப்பு கல்லுாரி மையங்களில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.
தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடு பட்டனர்.