/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் 4.78 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி
/
மாவட்டத்தில் 4.78 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி
ADDED : டிச 26, 2024 06:12 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 4,78,500 கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் 3ம் தேதி துவங்குவதாக கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
கலெக்டர் பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு :
விழுப்புரம் கோட்டத்தில் 2,35,000 கால்நடைகள், திண்டிவனம் கோட்டத்தில் 2,43,500 கால்நடைகள் உட்பட மொத்தம் 4,78,500 கால்நடைகளுக்கு வரும் 3ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடை பராமரிப்பு துறை மூலம் 97 தடுப்பூசி போடும் குழுக்கள் மூலம் தேசிய விலங்கின நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் கட்டுப்படுத்தம் திட்டம் மூலம் நுாறு சதவீதம் இலக்கு அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த தடுப்பூசி பணி நடக்கவுள்ளது.
கால்நடை வளர்க்கும் விவசாயிகள், பொதுமக்கள் மத்திய அரசு நிதியுதவியோடு செயல்படுத்தும் இந்த தடுப்பூசி திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி, தங்களின் கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும்.
இந்த தடுப்பூசியை சினையுள்ள கால்நடைகள், பால் கறக்கும் பசு மற்றும் எருமை இனங்களில் போட்டு கொள்வது அவசியம். இதனால் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது.
நுாறு சதவீதம் இலக்கு அடைய விவசாயிகள் கால்நடைகளை அதிகளவு ஆர்வத்தோடு முகாம்களுக்கு அழைத்து சென்று தடுப்பூசி போட்டு, பொருளாதார இழப்பிலிருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

