/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் கண்ணாடியை உடைத்த 5 பேர் கைது
/
கார் கண்ணாடியை உடைத்த 5 பேர் கைது
ADDED : ஜூன் 06, 2025 07:12 AM
விழுப்புரம்; விழுப்புரத்தில் நடந்த மோதலில் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் நவாப்தோப்பு சந்து பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் பூபதி, 32; இவர், நேற்று மதியம் தனது காரில் திடீர் குப்பம் பகுதி வழியாக சென்றார்.
அப்போது, எதிரே பைக்கில் வந்த முத்தோப்பு பகுதியை சேர்ந்த இன்தியாஸ், 28; என்பவர், கார் மீது மோதுவது போல் வந்துள்ளார். இதனை, காரில் வந்த பூபதியும், அவரது நண்பர்களும் தட்டிக்கேட்டுள்ளனர்.
உடனே, இன்தியாஸ் தனது ஆதரவாளர்களை அழைத்து வந்து, பூபதி மற்றும் அவரது நண்பர்களான மணிகண்டன், அசேன் ஆகியோரை திட்டி தாக்கியதோடு, காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில், இன்தியாஸ், 28; அப்துல்ரகுமான், 20; ஹிமானுதின், 22; சித்திக், 20; தினேஷ்குமார், 25; ஆகியோர் மீது, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்தனர்.