/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கஞ்சா விற்ற 5 பேர் கைது 5.8 கிலோ பறிமுதல்
/
கஞ்சா விற்ற 5 பேர் கைது 5.8 கிலோ பறிமுதல்
ADDED : ஏப் 10, 2025 01:36 AM
விழுப்புரம் : திண்டிவனம் அருகே கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து, 5.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
பிரம்மதேசம் அருகே உள்ள ராவணாபுரம் ஏரிக்கரை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சப்இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தபோது, 2 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடித்தனர். சென்னையிலிருந்து கஞ்சா வாங்கி வந்து, விற்பனை செய்வது தெரியவந்தது.
சென்னைக்கு விரைந்து சென்ற போலீசார், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே மேலும் இருவரை கைது செய்து, 3.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்ற திண்டிவனம் வெள்ளிமேடுபேட்டை ஏழுமலை மகன் கார்த்திக்முரளி, 18; ரமேஷ் மகன் விமல், 18; தாதாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் பாலாஜி, 24; வந்தவாசி அடுத்த காட்டேரி கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் சக்திவேல்,18; கேரள மாநிலம், கோட்டயம் சித்திபுரி ஷோன்குரியன், 24; ஆகியோரை கைது செய்து, மொத்தமாக 5.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.