sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கோட்டக்குப்பம் கொலை வழக்கு 5 பேருக்கு 'குண்டாஸ்'

/

 கோட்டக்குப்பம் கொலை வழக்கு 5 பேருக்கு 'குண்டாஸ்'

 கோட்டக்குப்பம் கொலை வழக்கு 5 பேருக்கு 'குண்டாஸ்'

 கோட்டக்குப்பம் கொலை வழக்கு 5 பேருக்கு 'குண்டாஸ்'


ADDED : பிப் 26, 2026 06:40 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா சின்னகோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராயர் மகன் ஜவகர், 27; இவர், தனது நண்பர்களுடன், சின்னக்கோட்டகுப்பம் அமைதி நகரில், கடந்த ஜன.,28ம் தேதி மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து, அவரது நண்பர்களான புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த முருகன் மகன் ஹேம்நாத்குமார், 26; அதே பகுதி வாஞ்சிநாதன் நகரை சேர்ந்த முருகன் மகன் சந்தோஷ், 24; முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த சிவலிங்கம் மகன் கிரிகேசநாதன்,23; கருவடிக்குப்பத்தை சேர்ந்த செல்லவீரன் மகன் விக்னேஷ்வர்,33; சின்னக்கோட்டக்குப்பத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் சஞ்சய், 24; ஆகியோர் மீது, கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, 5 பேரையும் கைது செய்து, விழுப் புரம் அடுத்த வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவர்களது குற்ற நடவடிக்கை தடுக்கும்பொருட்டு, விழுப்புரம் எஸ்.பி., சாய்பிரனீத் பரிந்துரையின் பேரில், கொலை வழக்கில் சிறையில் உள்ள 5 பேரையும், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, கோட்டக்குப்பம் போலீசார், 5 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, நேற்று கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us