/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டை ஜப்தி செய்ய எதிர்ப்பு : தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
/
வீட்டை ஜப்தி செய்ய எதிர்ப்பு : தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
வீட்டை ஜப்தி செய்ய எதிர்ப்பு : தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
வீட்டை ஜப்தி செய்ய எதிர்ப்பு : தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
ADDED : பிப் 26, 2026 06:39 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், கடன் தவணை செலுத்தாததால், வீட்டை ஜப்தி செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் சாலாமேடு, வாரியர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ். இவரது சகோதரர் கமல்ராஜ். கடந்த 2023ம் ஆண்டு தனியார் வங்கி ஒன்றில் வீட்டு அடமான கடனாக ரூ. 30 லட்சம் பெற்றுள்ளனர். இதற்கான தவணை தொகையை கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கட்டவில்லை என , தெரிகிறது.
இதை யடுத்து தனியார் வங்கி அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவோடு நேற்று வீட்டை ஜப்தி செய்ய வந்துள்ளனர். அங்கிருந்த கமல்ராஜ், கடந்த சில மாதங்களாக தனக்கு உடல்நலம் குறைவால் மருத்துவ செலவுகள் அதிகரித்ததால் சரியான நேரத்தில் தவணை தொகை கட்ட முடியாமல் போனதாகவும், நேரில் பணம் செலுத்துவதாக தெரிவித்தனர். ஆனால், அதனை வங்கி அதிகாரிகள் ஏற்காமல் வீட்டை பூட்ட முயன்றுள்ளனர். ஆத்திரமடைந்த கமல்ராஜ், தனது உடலில் மண்ணெண்னை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏ ற்பட்டது. பின், அங்கு வந்த போலீசார், அவரை சமாதானம் செய்தனர். தொடர்ந்து வங்கி அதிகாரிகள், தவணை தொகை செலுத்த ஒருவாரம் அவகாசம் வழங்கிவிட்டு சென் றனர்.
தீக்குளிக்க முயன்ற கமல்ராஜ், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

