/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.1.69 கோடியில் 16 புதிய கட்டடங்கள் மஸ்தான் எம்.எல்.ஏ., திறந்துவைப்பு

ADDED : பிப் 26, 2026 05:09 AM

அவலுார்பேட்டை: வளத்தியில் நடந்த விழாவில் ரூ.1.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 16 புதிய கட்டடங்களை மஸ்தான் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
மேல்மலையனுார் அடுத்த வளத்தியில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நுாற்றாண்டு திருமண மண்டபம் மற்றும் நொச்சலுார், எய்யில், தொரப்பாடி, பரையம்பட்டு, கீழ்செவலாம்பாடி, கொடம்பாடி, நாரணமங்கலம், மேல்செவலாம்பாடி, அவலுார்பேட்டை, கோவில்புரையூர் கிராமங்களில் கட்டப்பட்ட நாடக மேடைகள், சத்துணவு சமையல் அறை, ரேஷன் கடை, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, காத்திருப்போர் கூடம் என 16 புதிய கட்டடங்களின் திறப்பு விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., ஜெய்சங்கர் வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ.,குத்து விளக்கேற்றி புதிய கட்டடங்களை திறந்து வைத்து , பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்விராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், கிராம ஊராட்சி பி.டி.ஓ., ஏகாம்பரம், துணை தலைவர் கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.