/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ்சில் மூதாட்டியிடம் 5 சவரன் நகை திருட்டு
/
பஸ்சில் மூதாட்டியிடம் 5 சவரன் நகை திருட்டு
ADDED : ஏப் 30, 2025 07:14 AM
விழுப்புரம்; பஸ்சில் மூதாட்டியிடம் 5 சவரன் நகையை திருடிச் சென்ற சம்பவத்தில் மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அண்ணா நகர் காலனி அமாவாசை மனைவி வேலுத்தாய், 60; இவரை, மதுரை மாவட்டம், முத்துபாண்டிபட்டி மகாராஜன், 21; என்பவர், சமையல் வேலை செய்ய காஞ்சிபுரம் மாவட்டம் அரக்கோணம் ஒரு அரிசி குடோனிற்கு அழைத்து சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த தமிழன், 22; நக்கல்பட்டி இந்திரா, 42; ஆகியோரும் வேலை செய்தனர்.
இரண்டு மாதம் முன், வேலையில்லை என கூறி வேலுத்தாயை காஞ்சிபுரத்தில் இருந்து மதுரைக்கு, தமிழன் பஸ் ஏற்றி விட்டார். வேலுத்தாயுடன் பஸ்சில் பயணித்த ஒருவர், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தபோது, 5 சவரன் நகையை ஏமாற்றி வாங்கிக்கொண்டு இறங்கி சென்றுவிட்டார்.
நகையை திருடிச் சென்ற நபர் மகாராஜன் உள்ளிட்ட மூன்று பேரும் அனுப்பியதாக, வேலுத்தாய் போலீசில் புகார் கொடுத்தார். மகாராஜன் உள்ளிட்ட மூவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

