/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
50 ஆண்டு சமூக சேவை டாக்டர் கவுரவிப்பு
/
50 ஆண்டு சமூக சேவை டாக்டர் கவுரவிப்பு
ADDED : நவ 01, 2024 06:34 AM

விழுப்புரம்: விழுப்புரம் டாக்டர் சிவக்குமாரின், 50 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி, கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் பண்டாரி மருத்துவமனை நிர்வாகி டாக்டர் சிவக்குமார், 80; இவரது தந்தை பண்டாரி, கடந்த 1948ம் ஆண்டு இந்த மருத்துவமனையை துவக்கினார்.
கடந்த 1972 ம் ஆண்டில் டாக்டர் சிவக்குமார் மருத்துவப் படிப்பை முடித்து, தந்தைக்கு துணையாக மருத்துவமனை பணிக்கு வந்தார். மருத்துவ சேவையுடன், பொது சேவையில் ஆர்வம் செலுத்தினார்.
இவரது மருத்துவமனைக்கு வந்த ஏழைகளுக்கு ஏராளமான உதவிகளை செய்தார். இந்திய மருத்துவ கழகத்தின் மாநில செயலாளராக 1988 ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் பதவி வகித்தார். கடந்த 1994 ம் ஆண்டு மாநில தலைவராக தேர்வானார்.
மேலும், பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தில் இணைந்து சங்க தலைவர் துவங்கி, மாவட்டத் தலைவர் வரை பல்வேறு பொறுப்புகள் மூலம், சேவையாற்றினார்.
சமீபத்தில், இவரது 80 வயது நிறைவு விழாவை, விழுப்புரத்தைச் சேர்ந்த லயன்ஸ் சங்கத்தினர் இணைந்து நடத்தினர். சமூக சேவகர் டாக்டர் சிவக்குமாரை பாராட்டி, கேடயம் பரிசளித்தனர்.
விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.