/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சென்டர் மீடியனில் கார் மோதல் கோட்டக்குப்பம் அருகே 6 பேர் காயம்
/
சென்டர் மீடியனில் கார் மோதல் கோட்டக்குப்பம் அருகே 6 பேர் காயம்
சென்டர் மீடியனில் கார் மோதல் கோட்டக்குப்பம் அருகே 6 பேர் காயம்
சென்டர் மீடியனில் கார் மோதல் கோட்டக்குப்பம் அருகே 6 பேர் காயம்
ADDED : மே 18, 2025 09:14 PM

கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் அருகே சென்டர் மீடியனில் கார் மோதிய விபத்தில் ஐ.டி., ஊழியர்கள் உட்பட 6 படுகாயமடைந்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் ராஜ கண்ணன் மகன் மகேஷ், 27; நாகராஜ் மகள் குணப்பிரியா, 25; டேவிட் 45; ஆந்திர மாநிலம் சித்துார் மதன பள்ளியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் பாரதி, 26; அதே பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் மகன் கிரீஷ், 26; பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். விடுமுறைக்காக கடந்த 16ம் தேதி இரவு புதுச்சேரிக்கு வந்தனர்.
கோட்டக்குப்பம் அடுத்த கூனிமேடு தனியார் பீச் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் மாலை ரிசார்ட்டின் மேலாளர் மரக்காணம் அடுத்த அழகன்பள்ளம் முரளிதரன், 55; என்பவரை அழைத்துக் கொண்டு புதுச்சேரி பகுதியை சுற்றிப் பார்க்க சென்றனர்.
நள்ளிரவு 12:00 மணிக்கு மீண்டும் கூனிமேட்டில் உள்ள ரிசார்ட்டுக்கு எட்டியாஸ் காரில் திரும்பினர். காரை கிரீஷ் ஓட்டினார். இ.சி.ஆரில் கீழ்புத்துப்பட்டு வெள்ளத்தரசு சந்திப்பு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கிரீஷ், ரிசார்ட் மேலாளர் முரளிதரன், மகேஷ், குணப்பிரியா, பாரதி, டேவிட் ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர்.
உடன், காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.