/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் 6 பாசன ஏரிகள் ரூ.3.85 கோடியில் சீரமைப்பு
/
மாவட்டத்தில் 6 பாசன ஏரிகள் ரூ.3.85 கோடியில் சீரமைப்பு
மாவட்டத்தில் 6 பாசன ஏரிகள் ரூ.3.85 கோடியில் சீரமைப்பு
மாவட்டத்தில் 6 பாசன ஏரிகள் ரூ.3.85 கோடியில் சீரமைப்பு
ADDED : நவ 24, 2025 05:43 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் 6 ஏரிகள் ரூ.3.85 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ்பெண்ணையாறு வடிநிலக் கோட்டத்திற்கு உட்பட்ட ஏரிகளை செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, ரூ. 50 லட்சம் மதிப்பில் மயிலம் தொகுதி விளங்கம்பாடி ஏரி, ரூ. 63 லட்சம் மதிப்பில் திண்டிவனம் தாலுகா நரேரிக்குப்பம் ஏரி, ரூ. 83 லட்சம் மதிப்பில் கீழ்எடையாளம் ஏரி, ரூ. 45 லட்சம் மதிப்பில் எறையானுார் ஏரி, ரூ. 71 லட்சம் மதிப்பில் செஞ்சி தொகுதி மேல்மலையனுார் ஏரி, ரூ. 73 லட்சம் மதிப்பில் விழுப்புரம் தொகுதி பெரும்பாக்கம் ஏரி சீரமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் மொத்தம் ரூ.3.85 கோடி செலவில் 6 ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

