/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் கடை கட்டடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
/
ரேஷன் கடை கட்டடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ADDED : நவ 23, 2025 05:33 AM

அவலுார்பேட்டை: மேல்செவலாம்பாடியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
மேல்மலையனுார் அடுத்த மேல்செவலாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட குப்பம் கிராமத்தில் செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி 9.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டு, இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வசந்தி, ஒன்றிய கவுன்சிலர் செல்வி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். மஸ்தான் எம்.எல்.ஏ., புதிய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மாவட்ட கவுன்சிலர் சாந்தி, செல்வி ராமசரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

