ADDED : நவ 30, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அருகே நுாறு நாள் வேலை செய்த பயனாளிகளை குளவி கொட்டியதில் 6 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செஞ்சி அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் தேசிய ஊரா வேலை உறுதி திட்டத்தில் பெரிய ஏரிக்கு தண்ணீ வரும் வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. காலை 10:30 மணியளிவில் பனை மரத்தில் இருந்த குளவிக் கூட்டில் இருந்து வெளியேறிய செங்குளவிகள் பயனாளிகளை துரத்தி கொட்டியது.
இதில், காமாட்சி, 66; யாகவள்ளி, 55; பரமேஸ்வரி, 45; ஜெயலட்சுமி, 50; வசந்தா, 57; பெரியதம்பி, 70; ஆகிய 6 பேர் மயக்கமடைந்தனர்.
உடன், செஞ்சி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சகிச்சை அளிக்கப்பட்டது.

