/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓநாய் கடித்து 6 ஆடுகள் பலி 10 ஆடுகள் படுகாயம்
/
ஓநாய் கடித்து 6 ஆடுகள் பலி 10 ஆடுகள் படுகாயம்
ADDED : ஆக 20, 2025 11:24 PM

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை, சேவூர், இறையானுார், கொங்கரப்பட்டு, குடிசைப்பாளையம் ஆகிய இடங்களில் சமீப காலமாக, மர்ம விலங்கு கடித்து, 75க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன; 50க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்துள்ளன.
நேற்று முன்தினம் நள்ளிரவு, திண்டிவனம் - வந்தவாசி சாலையில் உள்ள தாதாபுரத்தில், ஏழுமலை, 55, என்பவருக்கு சொந்தமான ஆட்டு பண்ணையில் புகுந்த மர்ம விலங்கு கடித்ததில், ஆறு ஆடுகள் உயிரிழந்தன; 10 ஆடுகள், கன்றுக்குட்டிக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து, வெள்ளிமேடுபேட்டை போலீசார், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஓநாய்கள் தான் ஆடுகளை கடித்திருக்க வேண்டும் என வனத்துறையினர் கூறினர். எனினும், ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.