/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பகுதியில் 600 ஏக்கர் சவுக்கு பயிர்கள் ஒடிந்து நாசம்
/
விழுப்புரம் பகுதியில் 600 ஏக்கர் சவுக்கு பயிர்கள் ஒடிந்து நாசம்
விழுப்புரம் பகுதியில் 600 ஏக்கர் சவுக்கு பயிர்கள் ஒடிந்து நாசம்
விழுப்புரம் பகுதியில் 600 ஏக்கர் சவுக்கு பயிர்கள் ஒடிந்து நாசம்
ADDED : டிச 06, 2024 04:49 AM

விழுப்புரம் : விழுப்புரம் பகுதியில் புயல், கனமழை வெள்ளத்தில் 500 ஏக்கர் அளவிலான சவுக்கு பயிர்கள் ஒடிந்து சேதமடைந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் தாக்கத்தால் பெய்த கனமழை மற்றும் தென்பெண்ணை ஆறு, மலட்டாறுகளில் வழிந்த வெள்ள நீர் அடித்துச் சென்றதால், ஏராளமான விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆறு, மலட்டாறு பிரிந்து செல்லும் தளவானுார், திருப்பாச்சனுார், குச்சிப்பாளையம், காவணிப்பாக்கம், வி.அரியலுார் சித்தாத்துார், கண்டமானடி, கொளத்துார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஒரே நாளில் அடித்துச் செல்லப்பட்ட வெள்ள நீரிலும், பலத்தை புயல் காற்றின் காரணமாகவும் சவுக்கு பயிர்கள் முழுவதும் ஒடிந்து சேதமானது.
தளவனுார் சுற்றுப்பகுதியில் 300 ஏக்கர் அளவிலும், குச்சிப்பாளையம், பில்லுார், ஆனாங்கூர், கண்டமானடி, அரியலுார், அத்தியூர் சுற்றுப் பகுதிகளில் 300 ஏக்கர் அளவிலும் முறிந்து வீணானது.
பெரிய மரங்களாக இருந்தால், தற்காலிகமாக வெட்டி விறகுக்காவது அனுப்ப முடியும், ஆனால் சிறு கன்றுகளாக ஒடிந்து போனதால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
அரசு நிவாரணத்துக்கான பயிர் சேத கணக்கிடும்போது, சவுக்கு பயிரிட்ட விவசாயிகளும், அதன் ஊடுபயிராக உளுந்து, வேர்க்கடலை பயிர் செய்திருந்ததும் வீணாகிப் போயுள்ளதால், அதனையும் கணக்கிட்டு உரிய இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.