/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ளத்தால் 650 டன் அரிசி சேதம்
/
வெள்ளத்தால் 650 டன் அரிசி சேதம்
ADDED : டிச 04, 2024 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் அரிசி ஆலைகளில் வெள்ள நீர் புகுந்து 650 டன் அரிசி, 25 ஆயிரம் மூட்டை நெல்கள் நனைந்து சேதமானது.
விக்கிரவாண்டியில் பெஞ்சல் புயல் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் டோல் கேட் பகுதியில் உள்ள 6 மார்டன் ரைஸ் மில்களில் வெள்ளம் புகுந்து ஆலைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 650 டன் அரசி மூட்டைகள், 25ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமாகியது. மேலும், ஆலையில் உள்ள மின் சாதனங்கள், அறவை சாதனங்களும் சேதமானது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கும், பேரிடர் துறை அமைச்சர், மாவட்ட அமைச்சர், எம்.எல்.ஏ., ஆகியோருக்கு அரிசி ஆலை அதிபர்கள் நிவாரணம் வழங்க கோரி மனு அனுப்பியுள்ளனர்.