/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில விளையாட்டு போட்டி 663 பேர் பங்கேற்பு
/
மாநில விளையாட்டு போட்டி 663 பேர் பங்கேற்பு
ADDED : அக் 03, 2025 11:38 PM
விழுப்புரம் : மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனை யர், 663 பங்கேற்றுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத் தில், முதல்வர் கோப்பைக் கான விளையாட்டு போட்டிகள் கடந்த இரு மாதங்களாக மாவட்ட விளையாட்டு அரங்கில், நடந்தது.
மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு போட்டி களில் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடக்கிறது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 633 பேர், மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு, பங்கேற்றுள்ளனர்.
சென்னை மற்றும் செங்கல்பட்டு சென்ற வீரர், வீராங்கனையரை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வழி அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.