/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
/
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
ADDED : அக் 03, 2025 11:37 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் எழுத்து தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது என, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜயசக்தி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மண்டலத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து தொடக்க கூட்டுறவு சங்கங்களின் (பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டுறவு பண்டகசாலைகள் தவிர) காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்டுகிறது.
இதற்காக, விழுப்புரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வரும் 11ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வுக்கான ஹால் டிக்கெட் விழுப்புரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் www.drbvpm.in என்ற இணையதளத்தில் நாளை முதல் வெளியிடப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்பட்ட யூசர் ஐ.டி., மற்றும் கடவு சொல் ஆகியவற்றை பயன்படுத்தியும் அல்லது அவர்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பயன்படுத்தியும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.