/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீ விபத்தில் 7 பைக்குகள் நாசம்; திண்டிவனத்தில் பரபரப்பு
/
தீ விபத்தில் 7 பைக்குகள் நாசம்; திண்டிவனத்தில் பரபரப்பு
தீ விபத்தில் 7 பைக்குகள் நாசம்; திண்டிவனத்தில் பரபரப்பு
தீ விபத்தில் 7 பைக்குகள் நாசம்; திண்டிவனத்தில் பரபரப்பு
ADDED : அக் 12, 2024 07:28 AM

விழுப்புரம்: திண்டிவனத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் தீப்பிடித்து 7 பைக்குகள் எரிந்து நாசமானது.
உத்தரபிரதேசத்தை ேர்ந்தவர் ஆலன். இவருடன் 15க்கும் மேற்பட்டோர் திண்டிவனம், கிடங்கல் பிள்ளையார் கோவில் தெருவில் வாடகை வீட்டில் தங்கி சீசனுக்கு தகுந்தாற்போல் பெட்ஷீட், தார்பாய், பிளாஸ்டிக் சேர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும், கடந்த 20 நாட்களுக்கு முன், தங்களது இரு சக்கர வாகனங்களை வீட்டில் நிறுத்தி விட்டு, சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்த நேற்று காலை திடீரென புகை வந்தது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், திண்டிவனம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, வீட்டின் பூட்டை உடைத்து தீணை அணைத்தனர். இருப்பினும், வீட்டில் நிறுத்தியிருந்த 7 பைக்குகள் எரிந்து சேதமடைந்தது.
இது குறித்து, திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

