/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2 நாட்களில் 7 கொலைகளே சட்டம் ஒழுங்கிற்கு சாட்சி; த.வெ.க., பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேட்டி

ADDED : மார் 24, 2025 06:17 AM

கோட்டக்குப்பம், : 'தமிழகத்தில் 2 நாட்களில் நடந்த 7 படுகொலைகளே சட்டம் ஒழுங்கிற்கு சாட்சி' என, த.வெ.க., பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகர த.வெ.க., சார்பில் நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்றார்.
கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், 'த.வெ.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை சென்னையில் தலைவர் விஜய் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது' என்றார். தமிழகத்தில் கொலைகள் அதிகரித்து வருவது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் 2 நாட்களில் நடந்துள்ள 7 படுகொலைகளே சட்டம், ஒழுங்கிற்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது.
தமிழகத்தில் த.வெ.க., தலைமையில்தான் ஆட்சி அமையும். புதுச்சேரியிலும் அதே நிலைப்பாடுதான். புதுச்சேரியில் நிர்வாக பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்' என்றார்.
நகர செயலாளர் முகமது கவுஸ், இணைச் செயலாளர் முகமது அன்சாரி, நிர்வாகிகள் முகமது சம்சுதீன், சாகுல் ஹமீது, பஷீர், ஜான் உட்பட பலர் பங்கேற்றனர்.