/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட ஜமாபந்தி முகாமில் 7,311 மனுக்கள் குவிந்தது! 6,348 மனுக்கள் மீது தீர்வு காண தீவிரம்
/
மாவட்ட ஜமாபந்தி முகாமில் 7,311 மனுக்கள் குவிந்தது! 6,348 மனுக்கள் மீது தீர்வு காண தீவிரம்
மாவட்ட ஜமாபந்தி முகாமில் 7,311 மனுக்கள் குவிந்தது! 6,348 மனுக்கள் மீது தீர்வு காண தீவிரம்
மாவட்ட ஜமாபந்தி முகாமில் 7,311 மனுக்கள் குவிந்தது! 6,348 மனுக்கள் மீது தீர்வு காண தீவிரம்
ADDED : ஜூன் 10, 2025 10:28 PM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில் பெறப்பட்ட 7,311 மனுக்களில், 380 மனுக்கள் தள்ளுபடி செய்து, 6,348 மனுக்களுக்கு தீர்வு காண்பதில் அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.
வருவாய்த் துறை சார்பில் ஆண்டுதோறும் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் முகாம் நடத்தப்படுகிறது. இந்த வருவாய் தீர்வாயத்தில் கலெக்டர், தாசில்தார், ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் தங்களின் விவசாய நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்த விவரங்கள் கேட்டு மனுக்கள் கொடுக்கின்றனர். மேலும், கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், சுடுகாடு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் மனு கொடுப்பர்.
இலவச வீட்டுமனை பட்டா, வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம், ரேஷன் கார்டு, ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் உதவித்தொகை, வறட்சி நிவாரண நிதி, நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றம் தொடர்பாக இந்த வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பித்து பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் மீது வருவாய் தீர்வாயத்தில் உடனடியாக வருவாய்த்துறையினரால் தீர்வு காணப்பட்டு வருகிறது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில், 1434ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் கடந்த மே 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்தது. 10 நாட்கள் நடந்த இம்முகாமில், மாவட்டத்தில் 9 தாலுகாக்களில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7,311 மனுக்கள் குவிந்தது.
செஞ்சி தாலுகாவில் 644, கண்டாச்சிபுரத்தில் 888, மரக்காணத்தில் 786, மேல்மலையனுாரில் 728, திருவெண்ணெய்நல்லுாரில் 575, திண்டிவனத்தில் 1391, வானுாரில் 578, விக்கிரவாண்டியில் 675, விழுப்புரத்தில் 1046 மனுக்கள் வரப்பெற்றது.
இதில், செஞ்சியில் 21 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 10 மனுக்கள் தள்ளுபடி செய்து, 613 மனுக்கள் விசாரணையில் உள்ளது. இதேபோன்று, கண்டாச்சிபுரத்தில் 47 மனுக்களுக்கு உடனடி தீர்வும், 45 மனுக்கள் தள்ளுபடி செய்து 796 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
மரக்காணத்தில் 46 மனுக்கள் தீர்வு காணப்பட்டதுடன், 4 மனுக்கள் தள்ளுபடி செய்து 736 மனுக்கள் விசாரணையில் உள்ளது. மேல்மலையனுாரில் 93 மனுக்கள் தீர்வு காணப்பட்டு, 38 மனுக்கள் தள்ளுபடி செய்தனர். 597 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில், 42 மனுக்கள் ஏற்று தீர்வு காணப்பட்டது. 81 மனுக்கள் தள்ளுபடி செய்து, 452 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
திண்டிவனத்தில் 110 மனுக்கள் தீர்வு காணப்பட்டு, 120 மனுக்கள் தள்ளுபடி செய்தனர். மீதம் 1161 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
வானுாரில் 36 மனுக்களை முடித்து வைத்து, 11 மனுக்கள் தள்ளுபடி செய்தும், 531 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
விக்கிரவாண்டியில் 82 மனுக்கள் உடனடி தீர்வு கண்டு, 40 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில், 553 மனுக்கள் விசாரணையில் உள்ளது. விழுப்புரத்தில் 106 மனுக்கள் ஏற்கப்பட்டு, 31 மனுக்கள் தள்ளுபடி செய்தும், 909 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 583 மனுக்கள் ஜமாபந்தி முகாம் நாட்களிலே தீர்வு காணப்பட்டது. 380 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 6348 மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து, தீர்வு காண்பதில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.