/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாரி மீது வேன் மோதல் 8 பேர் காயம்
/
லாரி மீது வேன் மோதல் 8 பேர் காயம்
ADDED : நவ 06, 2024 05:38 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டு, புளியம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் பிரின்ஸ், 34; சாமுவேல், 30; கணேஷ், 18; மூன்று பேரும் தங்கள் குடும்பத்தினருடன் 8 குழந்தைகள் உட்பட 26 பேர் கன்னியாகுமரிக்கு மேக்சி கேப் வேனில் சுற்றுலா சென்று வீடு திரும்பினர்.
வேனை மதுராந்தகம் ஓனப்பாக்கத்தைச் சேர்ந்த சேகர், 22; ஓட்டினார். நேற்று அதிகாலை 4:45 மணியளவில் வேன் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே சென்றபோது, முன்னால் விதை நெல் ஏற்றிச் சென்ற லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் லாரியின் பின்னால் வேன் மோதியது.
இதில், வேனில் பயணம் செய்த சந்தோஷ், 29; கார்த்திக், 23; செல்வம், 50; மகேஷ், 37; திவ்யா, 30; இவாஞ்சலி, 27; உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.