/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்வு
/
மாவட்டத்தில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்வு
ADDED : ஜூன் 07, 2025 01:35 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் நிலைய அலுவலர்களாக இருந்த 8 போலீஸ் நிலையங்கள், இன்ஸ்பெக்டர் நிலைய அதிகாரியாக கொண்ட போலீஸ் நிலையங்களாக தரம் உயர்த்தப்படுகிறது.
சட்டசபை கூட்டத்தொடரில், தமிழகத்தில் சப்இன்ஸ்பெக்டர்கள் நிலைய அலுவலர்களாக, பணியில் இருக்கும் போலீஸ் நிலையங்களில் 280 போலீஸ் நிலையங்கள், இன்ஸ்பெக்டர் நிலைய அலுவலர்களாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகிறது.
அதில், கண்டாச்சிபுரம், கெடார், அனந்தபுரம், வெள்ளிமேடுபேட்டை, ஒலக்கூர், பெரியதச்சூர், காணை, அவலுார்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்கள் இடம்பெற்றுள்ளது.