/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
9 கிலோ குட்கா பறிமுதல் வியாபாரி கைது
/
9 கிலோ குட்கா பறிமுதல் வியாபாரி கைது
ADDED : செப் 28, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அடுத்த சிங்கனுாரில் 9 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் அடுத்த சிங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன், 33; இவரது வீட்டில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று வீட்டை ஆய்வு செய்து, 9.900 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, செந்தமிழ்ச் செல்வனை கைது செய்தனர்.