/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக பைக் ஓட்டிய வழக்கில் 9 பேர் கைது
/
அதிவேகமாக பைக் ஓட்டிய வழக்கில் 9 பேர் கைது
ADDED : அக் 14, 2025 06:53 AM
விழுப்புரம்; விழுப்புரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டி சென்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் நகரில் அதிவேகமாக பைக்குகள் ஓட்டிச் செல்வதால் விபத்துகள் தொடர்கிறது. மேலும், பைக் சாகசங்களும் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து, நகரில் முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை செய்து, அதிவேகமாக பைக் ஓட்டுவோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்யும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்ற திருவாமாத்துார் வெங்கடேசன், 41; வி.அரியலுார் கிஷோர்குமார்,18; வழுதரெட்டி திலீபன், 26; ஆகியோர் அதிவேகமாக பைக் ஓட்டியதாக, வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
அதே போல், விழுப்புரம், முத்தோப்பு சிராஜ்,19; தாமரைக்குளம் அரவிந்த், 25; ஆகியோரை டவுன் போலீசார், கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், விழுப்புரம் பூந்தோட்டம் சந்துரு, 25; திருவள்ளுவர் நகர் வெங்கடபிரசாத், 27; ஆகியோரை, விழுப்புரம் மேற்கு போலீசார், கைது செய்தனர்.
திண்டிவனம் திண்டிவனம் போலீசார், செஞ்சி பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திண்டிவனம் அடுத்த நெய்குப்பியை சேர்ந்த நந்தகுமார், 25; மற்றும் ஒடிசா மாநிலம், ஜாமுண்டா கிராமத்தை சேர்ந்த அஜய் ெஷட்டி, 23; ஆகியோர் தங்களின் பைக்குகளில் அதிவேகமாக பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் சென்றது தெரியவந்தது. உடன், இருவர் மீதும் வழக்குப் பதிந்த கைது செய்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.