/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கராத்தே போட்டியில் சாதிக்கும் 9 வயது மாணவி
/
கராத்தே போட்டியில் சாதிக்கும் 9 வயது மாணவி
ADDED : ஜூலை 17, 2025 12:19 AM

விழுப்புரம் : சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் விழுப்புரம் மாணவி தேஜஷ்னி சாதித்து வருகிறார்.
விழுப்புரம் அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்த பரணிகுமார் மகள் தேஜஷ்னி. 9 வயதான இளம் கராத்தே வீராங்கனையான இவர், 4 வயது முதல் கராத்தே போட்டிகளில் சாதித்து, பதக்கங்களை வென்று வருகிறார். பள்ளிக்கூடம் போகும் முன்பே 3 வயதில், வளவனுார் கராத்தே பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று இளம் வயதில் சாதித்து வருகிறார்.
இவர், 8 வயதில் தமிழக அளவில் நடந்த கராத்தே போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார். தென்னிந்திய அளவிலான போட்டியில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.
கடந்த வாரம் இலங்கையில், விளையாட்டு துறை சார்பில் நடந்த தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இதில், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆகிய 6 தெற்காசிய நாடுகளிலிருந்து, பல்வேறு வயது பிரிவை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் 10 வயதிற்குட்பட்ட பெண்கள் “காடா” பிரிவில், மாணவி தேஜஷ்னி சிறப்பாக விளையாடி, வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
வெற்றியுடன் திரும்பிய மாணவி தேஜஷ்னியை விழுப்புரம் கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.
அப்போது, பயிற்சியாளர் சென்செய் சேதுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.