/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொபட் மீது லாரி மோதி விபத்து : தாய் கண் முன் 2 வயது குழந்தை பலி
/
மொபட் மீது லாரி மோதி விபத்து : தாய் கண் முன் 2 வயது குழந்தை பலி
மொபட் மீது லாரி மோதி விபத்து : தாய் கண் முன் 2 வயது குழந்தை பலி
மொபட் மீது லாரி மோதி விபத்து : தாய் கண் முன் 2 வயது குழந்தை பலி
ADDED : நவ 22, 2025 07:33 AM
விழுப்புரம்: மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தாய் கண்முன் இரண்டு வயது குழந்தை பரிதாபமாக இறந்தார்.
திண்டிவனம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சுமித்ரா, 26; இவர், நேற்றிரவு 7:40 மணியளவில் தனது மகன் நவனீஸ்வரன், 2; என்பவரை மொபட்டில் ஏற்றிக்கொண்டு கர்ணாவூர் பாட்டையில் இருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, திண்டிவனம் சர்வீஸ் ரோட்டில் திரும்பினார்.
அப்போது, பின்னால் வந்த டாராஸ் லாரி மொபட் மீது மோதியதில் நவனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், வலது காலில் முறிவு ஏற்பட்ட சுமித்ராவை அருகிலிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். திண்டிவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.