/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆள் இல்லாத வீட்டில் துப்பாக்கி மான் கொம்பு பறிமுதல் : செஞ்சி அருகே பரபரப்பு

ADDED : நவ 22, 2025 07:28 AM

செஞ்சி: ஆள் இல்லாத வீட்டில் இருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் மான் கொம்புகளை நுண்ணறிவு புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் நுண்ணறிவு புலனாய்வு போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம், தலைமை காவலர்கள் பாண்டியன், செந்தில்குமார், காவலர்கள் ஜெரால்டு, மணிகண்டன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை செஞ்சி எம்.ஜி.ஆர்., நகர் நரிக்குறவர் குடியிருப்பில் சுப்ரமணி மகன் அரவிந்தன் 25; என்பவர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் யாரும் இல்லை. சோதனையில் ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு துப்பாக்கி பேரல், 6 மான் கொம்புகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்து செஞ்சி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.