ADDED : ஜன 06, 2024 12:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்:விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் மூசா, 19, திண்டிவனத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், கடந்த தீபாவளி அன்று நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அம்பேத்கர் நகர் வழியாக ரோந்து சென்ற போலீஸ் வாகனத்தை நோக்கி வீசி வெடிக்க செய்து, அதை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
கோட்டக்குப்பம் போலீசார் மாணவர் மூசாவை விசாரித்தனர். பெரிய புள்ளியாக தன்னை காட்டிக் கொள்வதற்காக, நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீசியதை ஒப்புக் கொண்டார். போலீசார் மூசாவை கைது செய்தனர்.