/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயன்பாடின்றி பூட்டி கிடக்கும் சமுதாயக்கூடம்
/
பயன்பாடின்றி பூட்டி கிடக்கும் சமுதாயக்கூடம்
ADDED : செப் 08, 2025 03:13 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பூட்டி கிடக்கும் சமுதாய கூடத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் நகராட்சி வழுதரெட்டி கோவிந்தசாமி லே அவுட் பகுதியில் கடந்த 2010-11ம் ஆண்டு எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் 15 லட்சம் ரூபாய் செலவில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.
இந்த சமுதாயக்கூடம் கடந்த, 2011ம் ஆண்டு டிச., மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த கூடம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல், அரசு குடோனாக மாறியது. தொடர்ந்து, சமுதாயக்கூடம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது.
இதனால், கோவிந்தசாமி லே அவுட் பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்களின் குடும்ப சுப நிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் அதிக செலவு செய்து நடத்தும் நிலை நீடித்து வருகிறது.
பூட்டி கிடக்கும் சமுதாயக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.