/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதையில் தகராறு துண்டானது கை விரல்
/
போதையில் தகராறு துண்டானது கை விரல்
ADDED : நவ 16, 2024 04:59 AM
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே மது போதையில் ஏற்பட்ட மோதலில் கை விரலை கண்டித்து துண்டாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
கண்டமங்கலம் அடுத்த கொடுகூரைச் சேர்ந்தவர் முருகன் மகன் சுனில், 23; கூலித் தொழிலாளி. கடந்த 11ம் தேதி நண்பர் வினோத்குமார், 23; மற்றும் சிலருடன் சேர்ந்து மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 13ம் தேதி அதே ஊரில் பால் பூத் அருகே வினோத்குமார் அண்ணன் விக்னேஷ் 29; ஏன் என் தம்பியை தாக்கினாய் என சுனிலிடம் தட்டிக்கேட்டார்.
ஆத்திரம் அடைந்த சுனில், விக்னேைஷ தாக்கி கைவிரலை கடித்தார். இதில் விக்னேஷ் கைவிரல் துண்டானது. விக்னேஷ் கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து சுனிலை கைது செய்தனர்.