/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாதாள சாக்கடை பள்ளத்தில் லோடுடன் சிக்கிய லாரி
/
பாதாள சாக்கடை பள்ளத்தில் லோடுடன் சிக்கிய லாரி
ADDED : பிப் 17, 2024 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லோடுடன் வந்த லாரி சிக்கியது.
திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும், பாதாள சாக்கடை திட்டத்திற்காக மேன்ேஹால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், மேன்ேஹால் மற்றும் குழாய் புதைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரியாக கொட்டி மூடப்படவில்லை என புகார் எழுந்தது.
இந்நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில் செஞ்சி சாலையில் ரோஷணை பாட்டை செல்லும் பாதையில், செங்கல் ஏற்றி சென்ற லாரி பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியது. தொடர்ந்து ஜே.சி.பி., வாகனம் மூலம் மீட்கப்பட்டது.