ADDED : அக் 19, 2025 11:54 PM

விழுப்புரம்: மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், மெல்ல கற்போருக்கான கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
இதில் கலெக்டர் பேசுகையில், 'மாவட்டத்தில் கடந்தாண்டை விட, இந்தாண்டு மாணவ, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த தேர்ச்சி அதிகரிப்பு காரணமாக இருந்த, சி.இ.ஓ., டி.இ.ஓ., பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.
மேலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களை கல்வியில் சிறந்த மாணவர்களாக உருவாக்கிட கல்வித்துறை அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும்,' என்றார்.
இந்த கூட்டத்தில் சி.இ.ஓ., அறிவழகன், டி.இ.ஓ.,க்கள் சேகர், சுப்பரமணி, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர்(பயிற்சி) இளவரசி, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பெருமாள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.