ADDED : அக் 19, 2025 11:55 PM

செஞ்சி: பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவில் இடத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
மேல்மலையனுார் ஒன்றியம் பெருவளூர் கிராமத்தில் ஒரு லட்சம் தீபங்கள் ஒரே நேரத்தில் ஏற்றி வழிபாடு நடந்தப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான கோடீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பசுமை தமிழகம் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்.
ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவலிங்கம் , உதவி ஆணையர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
தனி தாசில்தார் அருண்மொழி, அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கீதா, மேலாளர் சதீஷ், காசாளர் மணி ஊராட்சி தலைவர் கந்தவேல் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.