/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நடுநிலை தவறாத நாளிதழ்: பொன்முடி பெருமிதம்
/
நடுநிலை தவறாத நாளிதழ்: பொன்முடி பெருமிதம்
ADDED : செப் 05, 2025 09:57 PM

விழுப்புரம்:
தமிழக மக்களின் வளர்ச்சிக்கும், மாநில பொருளாதார மேம்பாட்டிற்கும் தினமலர் உறுதுணையாக உள்ளதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
மாணவர்கள் சிறந்த கல்வி பெற்றிடவும், படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவும் தொடர்ந்து நல்வழி காட்டி, தினமலர் நாளிதழ் சிறந்த சேவையாற்றி வருகிறது.
அறிவியல் தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் மற்றும் பொதுநலத்தில் அக்கறையோடு, 75 ஆண்டுகால பத்திரிக்கை சேவையில் முத்திரை பதித்த தினமலர் நாளிதழுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ஆரம்ப காலம் முதல் நடுநிலை நாளிதழ் என்கிற நற்பெயரை பெற்ற தினமலர் தொடர்ந்து அதே வழியில் ஜனநாயக கடமையை ஆற்றிட வாழ்த்துகின்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.