/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சமூக பொறுப்புடன் அரும்பணியாற்றும் தினமலர்
/
சமூக பொறுப்புடன் அரும்பணியாற்றும் தினமலர்
ADDED : செப் 05, 2025 09:57 PM

விழுப்புரம்:
தமிழகத்தில் சமூக அக்கறையோடு செய்திகளை வெளியிட்டு, தினமலர் அரும் பணியாற்றி வருகிறது என, அ.தி.மு.க., எம்.பி., சண்முகம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
உள்ளதை உள்ளபடி சொல்வதில், தனிப்பாங்கை கடைபிடிக்கும் பத்திரிக்கையாக விளங்குகிறது. தமிழ் எழுத்து சீர்திருத்தம் முதற்கொண்டு, சமூக சீர்திருத்தங்களுக்கும், மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதிலும் முன்னணி வகிக்கிறது.
பள்ளி, கல்லுாி மாணவர்கள், உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள், பொறியியல் படிப்பு குறித்த சந்தேகங்கள், மருத்துவ படிப்புக்கான மாதிரி 'நீட்' தேர்வை நடத்தி, மாணவ, மாணவிகளிடையே எழக்கூடிய அச்சத்தை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது.
தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊடகத்தளத்தில் உண்மை தன்மையுடன் விருப்பு வெறுப்பு இன்றி, செய்திகளை முந்திதரும் தினமலர் நாளிதழ், மேலும் பல மைல் கற்களை தாண்டி சாதனை படைத்திட வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.