/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏ.டி.எம்.,மில் ரூ.10 ஆயிரம் வங்கியில் ஒப்படைத்த ஏட்டு
/
ஏ.டி.எம்.,மில் ரூ.10 ஆயிரம் வங்கியில் ஒப்படைத்த ஏட்டு
ஏ.டி.எம்.,மில் ரூ.10 ஆயிரம் வங்கியில் ஒப்படைத்த ஏட்டு
ஏ.டி.எம்.,மில் ரூ.10 ஆயிரம் வங்கியில் ஒப்படைத்த ஏட்டு
ADDED : ஜூலை 22, 2025 06:39 AM

திண்டிவனம் : திண்டிவனம் ஏ.டி.எம்.,மில் பணத்தை எடுக்காமல் விட்டுச் சென்றவரின் பணத்தை, வங்கி அதிகாரியிடம் போலீஸ் ஏட்டு ஒப்படைத்தார்.
திண்டிவனம், ரோஷணை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன், 43; டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை 9:20 மணியளவில், திண்டிவனம் நேரு வீதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கச் சென்றார்.
அப்போது ஏ.டி.எம்., இயந்திரத்திலிருந்து பணம் வெளியே வரும் பகுதியில் 10 ஆயிரம் ரூபாய் வெளியே தெரியும்படி இருந்தது. உடனே, அந்த பணத்தை கொண்டு வந்து வங்கி மேலாளர் சுபாஜிடம் விபரத்தை கூறி, ஒப்படைத்தார். கேட்பாரற்று ஏ.டி.எம்.,மில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஏட்டு நாகராஜை, டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ் பாராட்டினார்.