/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதையில் மயங்கி விழுந்தவர் சாவு
/
போதையில் மயங்கி விழுந்தவர் சாவு
ADDED : ஆக 07, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குடிபோதையில் மயங்கி விழுந்தவர் இறந்தார்.
காங்கேயனுாரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சத்யன், 48; குடிப்பழக்கம் உடையவர். இவர், நேற்று முன்தினம் மாலை குடி போதையில் வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்து கிடந்தார்.
அவரது குடும்பத்தினர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது, சத்யன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து, அவரது மகன் குமரன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.