/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உள்நாட்டு வணிகர்களை காக்க தனி சட்டம்; வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் கோரிக்கை
/
உள்நாட்டு வணிகர்களை காக்க தனி சட்டம்; வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் கோரிக்கை
உள்நாட்டு வணிகர்களை காக்க தனி சட்டம்; வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் கோரிக்கை
உள்நாட்டு வணிகர்களை காக்க தனி சட்டம்; வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் கோரிக்கை
ADDED : டிச 10, 2024 07:12 AM
செஞ்சி; விழுப்புரம் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் செஞ்சி சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுக்குழு கூட்டம் செஞ்சியில் நடந்தது.
இதில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா பேசியதாவது:
மத்திய அரசு ஜி.எஸ்.டி., சட்டம் இயற்றும் போது வியாபாரிகளை பாதிக்குமா என சிந்திக்கவில்லை. கடந்த ஆட்சியில் சாலைகள் அமைத்து, சுரங்கங்கள் அமைத்து குறிப்பிட்ட தொகையை வசூலித்தனர். ஆனால் இன்று வணிகத்திற்காக ஆண்டுக்கு ஆண்டு சுங்க கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதை எதிர்த்து போராடுவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக உள்ளது.
ஜி.எஸ்.டி.,யால் ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ந்து, உள்நாட்டு வியாபாரிகளை நெரித்துக் கொண்டு வருகிறது. எனவே மத்திய அரசு உள்நாட்டு வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். இச்சட்டம் கொண்டு வராவிட்டால் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 10 லட்சம் கடைகள் காணாமல் போய்விடும்.
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் 10 ஆயிரம் 5 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்கிறது. ஆனால் சாமானிய மக்களை பாதுகாக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை கண்டித்து வரும் 11ம் தேதி தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து டில்லியை நோக்கி வணிகர்களின் ஊர்வலம் நடைபெற உள்ளது.
இவ்வாறு விக்ரமராஜா பேசினார்.