/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டடத்தின் மேல் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி
/
கட்டடத்தின் மேல் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி
ADDED : செப் 22, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மரக்காணம் அடுத்த மண்டவாயில் இறால் கம்பெனி கட்டடத்தின் மேல் இருந்த, சிமென்ட் ஷீட்டை கழற்ற ஏறிய வாலிபர் தவறி விழுந்து இறந்தார்.
கடலுார் அடுத்த மேல்மாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார், 40; இவர், கடந்த 19ம் தேதி மண்டவாயிலில் உள்ள இறால் கம்பெனி கட்டடத்தின் மேல் உள்ள சிமென்ட் ஷீட்டை கழற்றுவதற்காக மேலே ஏறினார். அப்போது சரவணகுமார் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு இறந்தார்.
மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.