/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி
/
பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி
ADDED : டிச 23, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: பைக் மீது கார்மோதியதில் வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மரக்காணம் அடுத்த வடஅகரத்தை சேர்ந்த பழனிவேல் மகன் ராஜேஷ், 20; இவரது உறவினர் கோவடியை சேர்ந்த பலராமன் மகன் தாமோதரன், 12; என்பவரை பைக்கில் பின்புறத்தில் உட்கார வைத்துக் கொண்டு புதுச்சேரியை நோக்கி சென்றுள்ளார்.
அப்பொழுது செட்டிநகர் பஸ் நிறுத்தம் அருகே புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ராஜேஷ் ஓட்டி வந்த பைக் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் படுகாயமடைந்து பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் இறந்தார்.
மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

