/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழுதாகி நின்ற டிராக்டர் டிரெய்லர் சர்வீஸ் சாலையில் 'டிராபிக் ஜாம்'
/
பழுதாகி நின்ற டிராக்டர் டிரெய்லர் சர்வீஸ் சாலையில் 'டிராபிக் ஜாம்'
பழுதாகி நின்ற டிராக்டர் டிரெய்லர் சர்வீஸ் சாலையில் 'டிராபிக் ஜாம்'
பழுதாகி நின்ற டிராக்டர் டிரெய்லர் சர்வீஸ் சாலையில் 'டிராபிக் ஜாம்'
ADDED : ஜன 30, 2024 06:23 AM
கண்டமங்கலம் : கண்டமங்கலம் ரயில்வே மேம்பால சர்வீஸ் சாலையில் நேற்று காலை செங்கல் சூளைக்கு மரக்கட்டைகள் ஏற்றிச்சென்ற டிராக்டர் டிரெய்லரின் அச்சாணி உடைந்து, சாலை நடுவே நின்றதால் அப்பகுதில் போக்குவரத்து பாதித்தது.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 8:30 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி செங்கல் சூளைக்கு மரக்கட்டைகள் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிரெய்லர் கண்டமங்கலம் ரயில்வே கேட்டை கடந்து சென்றது.
ரயில்வே மேம்பாலத்திற்கு வடக்கே உள்ள சர்வீஸ் சாலையில் 50 மீட்டர் துாரம் சென்ற நிலையில் திடீரென, டிரெய்லரின் அச்சாணி உடைந்து சாலை நடுவே நின்றது.
காலையில் வாகன போக்குரவத்து நிறைந்த அலுவலக நேரத்தில் பழுதாகி நின்ற டிரெய்லரால் மேம்பால சர்வீஸ் சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மேம்பாலத்திற்கு தெற்கே உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் எதிரும் புதிருமாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஜே.சி.பி., மூலம் டிராக்டர் டிரெய்லரை அகற்றியதைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது.