/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு வடக்கு மாவட்ட தி.மு.க., தீர்மானம்
/
முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு வடக்கு மாவட்ட தி.மு.க., தீர்மானம்
முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு வடக்கு மாவட்ட தி.மு.க., தீர்மானம்
முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு வடக்கு மாவட்ட தி.மு.க., தீர்மானம்
ADDED : ஜன 21, 2025 06:48 AM

திண்டிவனம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று திண்டிவனத்தில் நடந்தது.
திண்டிவனத்தில் வரும் 27 ம் தேதி மாலை 4 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து ஆலேசனை நடத்துகிறார்.
அதனையொட்டி, திண்டிவனம் ஜெயபுரத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் மஸ்தான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர் பேசுகையில், முதல்வர் வருகையின் போது நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட பொருளாளர் ரமணன், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் கண்ணன், அவைத்தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், பழனி, தயாளன், மணிமாறன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு, வழக்கறிஞர் அணி ஆதித்தன், கோபிநாத், அருணகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வரும் 27ம் தேதி மாலை 4 மணியளவில் சென்னை சாலையில், ஆர்யாஸ் ஓட்டல் எதிரிலிருந்து திருமண மண்டபம் வரையில் நடைபெறும் ரோடு ேஷாவில், பங்கேற்கும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.