/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முருங்கை மரத்திலிருந்து விழுந்த வாலிபர் சாவு
/
முருங்கை மரத்திலிருந்து விழுந்த வாலிபர் சாவு
ADDED : மார் 14, 2026 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே முருங்கை மரத்திலிருந்து விழுந்த வாலிபர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த காணை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் அந்தோணி, 29; கூலித் தொழிலாளி. இவர், நேற்று காலை அவரது வீட்டு முன் உள்ள முருங்கை மரத்தில் ஏறினார்.
அப்போது, எதிர்பாராத விதமாக 15 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார்.
படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். காணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

