/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வயிற்று வலி செக்யூரிட்டி தற்கொலை
/
வயிற்று வலி செக்யூரிட்டி தற்கொலை
ADDED : மார் 14, 2026 04:39 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வயிற்று வலியால் செக்யூரிட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம் அடுத்த வி.நல்லாளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 61; சென்னையில் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 12ம் தேதி சொந்த ஊர் திரும்பியவர் இரவு மது அருந்தினார்.
அப்போது வயிற்று வலி அதிகமானது. இதனால், மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.
புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

