/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரை பாலமுருகன் கோவில் ஆடி கிருத்திகை விழா
/
காரை பாலமுருகன் கோவில் ஆடி கிருத்திகை விழா
ADDED : ஆக 16, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த காரை பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நடந்தது.
விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு பாலமுருகனுக்கு பால் அபிஷேகமும், தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காப்பு அணிந்து விரதமிருந்த பக்தர் சகாதேவன் கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுட்டு பக்தர்களுக்கு வழங்கினார்.