/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
/
மயிலம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
ADDED : ஆக 16, 2025 11:28 PM

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று அதிகாலை 6:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. 12:00 மணிக்கு மூலவர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கோவில் பிரகாரத்தில் அங்க பிரதட்சணம் செய்தனர். இரவு 7:30 மணிக்கு வெள்ளி தேரில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் திருமடத்தைச் சேர்ந்த சிவக்குமார், விஸ்வநாதன், ராஜிவ்குமார் செய்திருந்தனர்.