/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை கொடியேற்றம்
/
சுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை கொடியேற்றம்
ADDED : ஆக 07, 2025 11:29 PM

செஞ்சி: சுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
செஞ்சி, பி ஏரிக்கரை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில், ஒழுங்கு முறை விற்பனைக்கூட நெல், அரிசி, மணிலா வியாபாரிகள் சங்கம், எடை பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 53வது ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா வரும் 16 ம் தேதி நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், 6:00 மணிக்கு மகா கணபதி மற்றும் நவகிரக ஹோமமும், 8:00 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேமும், 8:30 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது.
இதில் அறங்காவலர் சிவக்குமார், கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் நெல், அரிசி, மணிலா வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், எடை பணியாளர் சங்க நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வரும் 16 ம் தேதி காலை 7:30 மணிக்கு எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம், 10:45 மணிக்கு அக்னி சட்டி, 108 கிலோ எடை உள்ள சக்திவேல் ஊர்வலமும், தொடர்ந்து மிளகாய் பொடி அபிஷேகமும், 12:00 மணிக்கு செடல் சுற்றுதல், மழுவேந்தல், தீமிதியும், மாலை 3:00 மணிக்கு அலகு குத்தி தேர் இழுத்தலும், 17ம் தேதி இடும்பன் பூஜையும் நடைபெற உள்ளது.